வெடிக்காத நிலையில் கைக்குண்டு மீட்பு

ஹஸ்பர் ஏ ஹலீம்_
திருகோணமலை,தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மெட்டியாவ வடக்கு பகுதியில் காணி துப்புரவு நடவடிக்கையின் போது வெடிக்காத நிலையில் கைக்குண்டு ஒன்று நேற்று (21) மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தனியார் காணியினை துப்புரவு செய்யும் போது இதனை கண்ட காணி உரிமையாளர் தம்பலகாமம் பொலிசாருக்கு தகவலை வழங்கியுள்ளார். குறித்த கைக் குண்டை செயலிழக்கச் செய்வது தொடர்பில் கந்தளாய் நீதிமன்ற நீதவானின் அனுமதியின் பின்னரே  இடம் பெறும் எனவும் தெரியவருகிறது.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.