எழுத்தாளர் அ.வா முஹ்ஸீன் எழுதிய வரலாற்று சிறப்புமிகு நூல் அறிமுக நிகழ்வு!

(அ . அச்சுதன்)
அறிஞர் சித்தி லெப்பை அவர்கள் எழுதிய அசன்பேயுடைய கதை எனும் நாவலின் பகுப்பாய்வு நூலாகபிரபல எழுத்தாளர் அ.வா.முஹ்ஸீன் (ஓய்வு நிலை ஆசிரியர்) அவர்கள் எழுதிய ‘அசன்பேயுடைய கதை – ஓர் மீள் வாசிப்பு’ வரலாற்று சிறப்புமிகு நூல் அறிமுக நிகழ்வு நேற்று 21.11.2021 ம் திகதி மூதூர் பிரதேச சபை கேட்போர் மண்டபத்தில்  இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளரும்,மூதூர் அனர்த்த உதவி  அமைப்பின் தலைவரும், எழுத்தாளருமான எம்.சீ.எம்.ஷெரீப்f கலந்து கொண்டார்.
நிகழ்விற்விற்கு தலைமையையேற்று தலைமையுரையை ஓய்வு நிலை அதிபர் கவிஞர். மீரா முஹைதீன் வழங்கினார், நூல் பற்றிய அறிமுகத்தை இளம் எழுத்தாளர் ஜே.எம்.இஹ்ஷான் வழங்கினார், நூல் ஆய்வு நயவுரையை ஓய்வு நிலை அதிபர் எழுத்தாளர். ஏ.எஸ்.உபைத்துல்லா அவர்கள் ஆற்றினார். இறுதியாக நிகழ்வு ஏற்புரையை நூலின் ஆசிரியர் அ.வா.முஹ்ஸீன் அவர்கள் நிகழ்த்தியிருந்தார்.
இந் நிகழ்வில் மூதூரின் மூத்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள்,சமூக பிரதிநிதிகள் மற்றும் நூலாசிரியரின் உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டதோடு சிறப்பு பிரதிகளையும் பெற்றுக் கொண்டனர்.