வலைப்பந்து கிண்ணத்தை சுவீகரித்த பதவிசிறிபுர செயலக அணி

ஹஸ்பர் ஏ ஹலீம்_

2021 ஆம் ஆண்டு திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் வலைப்பந்து    கிண்ணத்துக்கான சுற்றுப் போட்டி இன்று (19) திருகோணமலை மக்கேசர் உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது
பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
ஏழு அணிகள் பங்குபற்றிய இப்போட்டித்தொடரின்  இறுதிப்போட்டிக்கு தம்பலகாமம் பிரதேச செயலகம், பதவிசிறீபுர பிரதேச செயலக அணிகள்  தெரிவுசெய்யப்பட்டதுடன்  இறுதிப் போட்டியில் சம்பியனாக பதவிசிறீபுர அணியினர்  தெரிவு செய்யப்பட்டனர்.
மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ்,பிரதேச செயலாளர்கள்,பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.ஆர்.கே.எஸ்.குருகுலசூரிய, வீர வீராங்கனைகளும் கலந்து சிறப்பித்தனர்