திம்புலாகலை தேவாலங்காரா தேரோ வாகரைக்கு விஜயம்.

க.ருத்திரன்.
மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஆலங்குளம் மற்றும் குகநேசபுரம் கிராமங்களில் நிலவும் காணிப்பிணக்கு தொடர்பாக மக்களுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளும் முகமாக இன்று திம்புலாகலை தேவாலங்காரா தேரோ குறித்த பகுதிக்கு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.
பிரதேச மக்கள் தங்கள் பகுதிக்கு சமூகம் தந்து தாங்கள் எதிர்நோக்கும் காணிப் பிணக்கு தொடர்பாக தீர்வு பெற்றுத் தருமாறு அவரிடம் விடுத்த வேண்டுகோளினை அடுத்தே அவர் அவ்விடத்திற்கு சமூகமளித்திருந்தார்.
தங்களது காணிகளை சிலர் அத்துமீறி அபகரித்து வருவதாகவும் இதனால் இனமுரண்பாடு எறற்பட்டு கலகம் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் இவ்விடயம் தொடர்பாக மாவட்டத்தின் அரசியல் பிரமுகர்களிடம் தெரிவித்ததாகவும் பொலிஸ் நிலைத்திலும் முறைபாடு பதிவு செய்தும் பலன் எதுவும் கிடைக்கப்பெறவில்லையென தேரரிடம் கவலை தெரிவித்தனர்.
அத்துடன் தங்களது அரச ஆவணங்களையும் பார்வைக்கு சமர்ப்பித்தனர்.பிரதேச செயலகத்தினால் தங்களுக்கு காணி அரச ஓப்பம் வழங்கப்பட்டிருந்தும் அதற்குள் பலாத்காரமாக பயமுறுத்தி குறித்த காணி பகுதிக்குள் சிலர் அத்துமீறி குடியேறி வருவதாகவும் அவர்களை வெளியேற்றி தருமாறும் தேரரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
சம்பவங்களை கேட்டறிந்து கொண்ட தேரர் வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகருடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இவ் விடயம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யுமாறும் அதற்கான தீர்வு கிடைக்கப்பெறவில்லையென்றால் கிழக்கு மாகாண ஆளுநரிடம் முறையிடுவதாகவும் அதற்கும் தீர்வு கிடைக்கவில்லையென்றால் மட்டக்களப்பில் உள்ள காந்தி பூங்காவில் ஒன்று கூடி நியாயம் வேண்டி கவனயிர்ப்பு போராட்ட நடவடிக்கையில் ஈடுபட எல்லோரும் தயாரக வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அதற்கு மக்களும் சம்மதம் தெரிவித்தனர்.
தங்களுக்கு குத்தகை அடிப்படையில் கடைகள் கட்டுவதற்காக வழங்கப்பட்ட காணிக்குள் தனி நபர் ஒருவர் அத்துமீறி காணி அபகரிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் அதனை தடுத்து நிறுத்தி தருமாறு கோரிக்கை விடுத்து அண்மையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
மேற்படி கொழும்பு வீதியினை அன்மித்த குகநேசபுரம் மற்றும் ஆலங்குளம் ஆகிய இரு கிராமங்களைச் சேர்ந்தோர் சிலர் கடந்த ஒருமாத காலமாக கடை தொகுதி அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாகரை பிரதேச செயலகத்தின் அனுமதி பெற்றே இவ் நடவடிக்கை முன்னெடுத்து வருவதாக கூறுகின்றனர்.தற்காலிக கடை அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அருகில் வசிக்கும் நபர் தமக்கு வழங்கப்பட்ட காணியின் அளவினை விட மேலதிகமாக காணி அபகரிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த பிரதேசம் தற்போது காணிப் பிணக்கு அடிக்கடி இடம்பெறும் வலயமாக மாறியுள்ளது. இதில் பிரதேச செயலகம் தமது பணியினை முன்னெடுக்க முடியாத அவல நிலமையில் உள்ளது. இதனால் மக்கள் தங்களது அதிருப்தியினை அரசியல் பிரதிநிதிகள்இ பொலிசார்மற்றும் அரசநிர்வாகங்கள் மீது வெளிப்படுத்துகின்றனர்.