கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக சமூக சேவை திணைக்களத்தின் ஊடாக கோறளைப்பற்று மத்தி ஒளிமயம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் ஏற்பாட்டில் பிறைந்துறைச்சேனை சாதுலியா வித்தியாலயத்திலுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சக்கர நாற்காலி இன்று வழங்கி வைக்கப்பட்டது.
பாடசாலை அதிபர் எம்.சி.ஐயூப்கான் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.றமீஸா, சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.நஜீம், சமூகசேவை அபிவிருத்தி உத்தியோகத்தர், கோறளைப்பற்று மத்தி ஒளிமயம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவர் எம்.எம்.றபீக், ஆசிரியர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக சமூக சேவை திணைக்களத்தின் ஊடாக கோறளைப்பற்று மத்தி ஒளிமயம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் ஏற்பாட்டில் தெஹிவளையைச் சேர்ந்த தனவந்தரின் நிதி உதவி மூலம் பிறைந்துறைச்சேனை சாதுலியா வித்தியாலயத்திலுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களின் நன்மை கருதி சக்சர நாற்காலி வழங்கி வைக்கப்பட்டது.