நல்லூர் பகுதியில் வெடிமருந்துடன் இளைஞன் கைது..!

(அ . அச்சுதன் )
மூதூர் நல்லூர் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து வெடிமருந்துகளுடன் 18 வயதுடைய இளைஞரொருவரை வியாழக்கிழமை (18) மாலை மூதூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து டைனமைட் குச்சிகள் 02, டெட்டனேட்டர் குச்சிகள் 04 என்பனவும் மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞன் கடலில் மீன்பிடி தொழில் செய்கின்றவர் எனவும் இவரிடம்வெடி மருந்துகள் இருப்பதாகவும் மூதூர் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் வீட்டினை சோதனைக்கு உட்படுத்தியபோது வெடி மருந்துகளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக மூதூர் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர் .
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மூதூர் பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் இவரை மூதூர் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளையும் மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.