தோப்பூரில் டெங்கு பரிசோதனை..!

(அ . அச்சுதன் )

மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட தோப்பூர் பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை (19) வீடுகள் தோறும் டெங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பட்டதாரி பயிலுநர்கள் இணைந்து இப்பரிசோதனையை முன்னெடுத்ததோடு இவ் பரிசோதனை நடவடிக்கையில் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி ஹில்மி முஹைதீன் அவர்களும் ஈடுபட்டிருந்தார்.

இதன்போது டெங்கு பரவும் வகையில் சுற்றுச் சூழலை வைத்திருந்த பல வீடுகள் இணங்காணப்பட்டதோடு அவர்களுக்கு விழிப்புணர்வும், சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டதாக மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி ஹில்மி முகைதீன் தெரிவித்தார்.

ஒருசில வாரங்களாக மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு நோயாளர்கள் பலர் இணங்காணப்பட்டுள்ளதையடுத்து இவ் பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.