வீதி அபிவிருத்தி அதிகாரசபை கல்முனை காரியாலய நிறைவேற்று பொறியியலாளராக எந்திரி எஸ்.எம். அஸ்மீர் கடமைகளை பொறுப்பேற்றார்.

நூருல் ஹுதா உமர்

வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கல்முனை காரியாலய நிறைவேற்று பொறியியலாளராக எந்திரி செய்னுலாப்தீன் முஹம்மட் அஸ்மீர் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்று கொண்டார்.  2010 இல் வீதி அபிவிருத்தி அதிகாரசபை சபையில் இணைந்து கொண்ட அவர் இரு வருடங்கள் அங்கு பணியாற்றி பின்னர் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அம்பாறை காரியாலயம், தலைமைக்காரியாலயம், அக்கரைப்பற்று மாகாண காரியாலயம் என்பவற்றில் கடமையாற்றி கடந்த 2016 இல் நிறைவேற்று பொறியியலாளராக பதவியுயர்வு பெற்று நேற்றுவரை மொனராகல பிராந்திய காரியாலயத்தில் கடைமையாற்றி வந்தார்.

வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கல்முனை காரியாலய நிறைவேற்று பொறியியலாளராக கடமையாற்றி வந்த எந்திரி தாமோதரம் சிவசுப்ரமணியம் வீதி அபிவிருத்தி அதிகாரபையின் அக்கரைப்பற்று பிரதான பொறியியலாளர் அலுவலகத்தின் பிரதம பொறியியலாளராக பதவியுயர்வு பெற்றதை அடுத்தே அந்த இடத்திற்கு செய்னுலாப்தீன் முஹம்மட் அஸ்மீர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவரது பதியேற்பு நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கல்முனை காரியாலய தொழிநுட்ப உத்தியோகத்தர்கள், தொழிநுட்ப உதவியாளர்கள், பிரதம முகாமைத்துவ உதவியாளர் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.