விதவைகள்,மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு உதவி..!

(அ . அச்சுதன் )

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள அம்மன்நகர்,கணேசபுரம்,கடற்கரைச்சேனை,சிறினிவாசபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பெண் தலைமைதாங்கும் குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகளைக் கொண்ட குடும்பத்தினர் உள்ளடங்களாக சுமார் 50 குடும்பங்களுக்கு செவ்வாய்கிழமை (16) உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவின் கணேசபுரத்தில் செயற்படும் திருமுருகன் மக்கள் ஒன்றியத்தின் வேண்டுகோளுக்கிணங்க சர்வோதயம் அமைப்பினால் சுமார் 3500 ரூபாய் பெறுமதியான அரிசி,மா,பருப்பு,சீனி,சோயா,தேயிலை,உப்பு உள்ளடங்கிய  50 பொதிகள் பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் சர்வோதயம் அமைப்பின் வடகிழக்கு மாகாண பணிப்பாளர் திரு.வேல்முருகன் தேவராஜ், திருமுருகன் மக்கள் ஒன்றியத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.இராசமாணிக்கம் ஜீவேந்திரன் , செயலாளர் திரு.சசிதரன் பானுதேவன் உள்ளிட்ட ஏனைய செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது .