தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்ய பட்ஜெட்டை தோற்கடிக்காதீர்கள்_கிழக்கு ஆளுனர்

ஹஸ்பர் ஏ ஹலீம்_

தேவைகளை பூர்த்தி செய்ய வரவு செலவு திட்டத்தை தோற்கடிக்காதீர்கள் என திருகோணமலை மாவட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களிடம் கிழக்கு மாகாண  ஆளுனர் அநுராதா யஹம்பத் வலியுறுத்தியுள்ளார் தனிப்பட்ட மனக்குறைபாடுகள் காரணமாக உள்ளூராட்சி வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்க வேண்டாம்
திருகோணமலையிலுள்ள கோமரன்கடவல, பதவி ஸ்ரீ புர, மொரவெவ ஆகிய பிரதேச சபைகளின் தவிசாளர்களுடனும் அரசாங்க உறுப்பினர்களுடனும் இன்று (15) திருகோணமலையில் உள்ள  ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர்,

வரவு செலவுத் திட்டத்தை தோற்கடித்ததன் பின்னர் தலைவர்களுடன் தனிப்பட்ட குறைகளை தீர்த்துக்கொள்ள முற்பட்டால், அதற்கு தயாராக இருக்க வேண்டாம். இந்த நாட்டை சுபீட்சமான நாடாக மாற்றுவதற்கு அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் பெரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றார். அதற்கு நாம் அனைவரும் ஆதரவளிக்க வேண்டும். சபைகளின் வரவு செலவுத் திட்டங்கள் தோற்கடிக்கப்பட்டு அந்த சபைகள் நிலையற்றதாக மாறினால் அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டம் பின்னோக்கிச் செல்லும். தனிப்பட்ட குறைகளை தனித்தனியாக தீர்க்கவும். அபிவிருத்திப் பணிகளுக்காக தயாரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கு அரசாங்க உறுப்பினா்கள் என்ற வகையில் ஆதரவு தாருங்கள்.மேலும் பிரதேச சபைக்கு வருமானம் ஈட்ட நல்ல வழி உள்ளது.இயற்கை உரத்தை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருமானம் ஈட்டவும்.  தேவையான ஆதரவை நாங்கள் வழங்குவோம், ”என்று அவர் மேலும் கூறினார்.

இதன்போது கோமரன்கடவல, பதவி ஸ்ரீ புர மற்றும் மொரவெவ பிரதேச சபைகளின் தவிசாளர்கள் உட்பட அனைத்து அரச  உத்தியோகத்தர்ளும் கலந்துகொண்டனர்.