(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)
அரசாங்க தகவல் திணைக்களத்தில் கிழ் மாவட்ட செயலகங்களில் இயங்கி வருகின்ற அரசாங்க தகவல் திணைக்கள ஊடக கிளைகளில் பணியாற்றுகின்ற தகவல் அதிகாரிகள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முகாமைத்துவ உதவியாளர்கள் போன்ற உத்தியோகத்தர்களை ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும கடந்த சனிக்கிழமை மாத்தறை மாவட்டமாகிய தனது செந்த மாவட்டத்தில் தனியார் விடுதி ஒன்றில் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
மாவட்டங்களில் இயங்கிவருகின்ற தகவல் திணைக்களத்தின் ஊடக பிரிவில் கானப்படுகின்ற பிரச்சனைகள் தொடர்பாக ஆராயப்பட்டு அதன் ஊடாக அரசாங்கத்தின் செயல்ப்பாடுகளை மக்கள் மத்தியில் கொண்டு எவ்வாறு இலகுவாக கொண்டு செல்லமுடியும் என்பது தொடர்பாக ஆராயப்பட்டது.
தற்காலத்தில் ஊடகமாக சமூக வலைத்தளங்கள் பாரியபங்கிணை வகித்துவருகின்றது அதனை எவ்வாறன வகையில் திணைக்களங்கள் சாதகமாக்கிகொள்ளவேண்டும் என்பது குறித்த கலந்துரையாடல்கள் இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இக்கலந்துரையாடலின் போது ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும பிரதம அதிதியாகவும் நன்னீர் மின்பிடி துறைமுகங்கள் ராஐhங்க அமைச்சர் காஞ்சன விஜயசேகர தகவல் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் திருமதி லேக்கா பத்திரன மேலதிக பணிப்பாளர் நாயகம் மிலிந்த ராஜபக்~ மேலதிக அரசாங்க அதிபர் கசுன் வெல்லகேவா தகவல் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் எல்.பீ. திலகரத்தின ஆகியோர்கலந்து கொண்டனர்.