செங்கலடி பிரதேச சபைக்கு சொந்தமான வேப்பவட்டவான் பகுதியில் அமைந்துள்ள மூலிகைத் தோட்ட காணியினை ஏறாவூர் நகரத்திற்குட்பட்ட நபர் ஒருவரினால் கையகப்படுத்த எத்தனித்த வேளை தனது முயற்சியினால் தடுக்கப்பட்டதாக செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் ச.சுரேந்தர் தெரிவித்தார்.
எனது முயற்சியாலும், செங்கலடி பிரதேச சபை செயலாளரின் கவனத்திற்கும், தவிசாளரின் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று உரிய நபர்களை வெளியேற்றினேன்.
அத்தோடு ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு மூன்றாவது தடவையாகவும் போடப்பட்டுள்ளதுடன், மிக விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபரினால் 10 ஏக்கர் காணியினை அடைக்க முற்பட்ட வேளையில் மக்களின் என்னிடம் வழங்கிய வேண்டுகோளுக்கு இணங்க குறித்த இடத்திற்கு சென்று காணி அபகரிப்பினை தடுத்து நிறுத்தினேன்.
செங்கலடி பிரதேச சபைக்கு சொந்தமான பகுதியில் காணி அபகரிப்புக்கள் ஏற்படாத வகையில் நான் மக்களின் நலன்சார்ந்து எனது சேவையை மேற்கொள்வேன். இதற்கு இளைஞர்கள் எனக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்றார்.