சகல அரசாங்க ஊழியர்களுக்கும் 16000 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும்

Sri Lankan President Mahinda Rajapakse alights from his aircraft during his arrival at the Palam Air Force Station in New Delhi on June 8, 2010. Rajpakse is in India for a four-day state visit. AFP PHOTO/RAVEENDRAN (Photo credit should read RAVEENDRAN/AFP via Getty Images)
ஏ.பி.எம்.அஸ்ஹர்
சகல அரசாங்க ஊழியர்களுக்கும் 16000 ரூபா
சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரச சேவைகள் தொழிற்சங்க சம்மேளனம் இக்கோரிக்கையை ஜனாதிபதியிடம் விடுத்துள்ளது.
இச்சம்மேளனம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
தற்போதைய விலைவாசி கூடியுள்ள நெருக்கடியான நிலைமையில் எமது
குடும்பங்கள் சொல்லொணாத் கஷ்டம் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.
அரச சேவையில் உள்ள 15 இலட்சம் ஊழியர்களின் குடும்பங்களை சேர்ந்த 60 இலட்சம் மக்கள் இந்நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.எனவே எமது கோரிக்கைக்கு 2 வாரங்களில் ஏற்றுக்கொள்ளத்தக்க தீர்வு கிடைக்க வேண்டும் இல்லாவிட்டால் முன் அறிவித்தல் இன்றி தொடர் தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.