சம்மாந்துறையில் பல்கலைகழக மாணவர் ஒன்றியம் உதயம்.

ஏ.பி.எம்.அஸ்ஹர்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் அமைப்பாக சம்மாந்துறையில் இயங்கி வரும்  இளைஞர் அணி  பல்கலைகழக மாணவர்களை ஒன்றினைத்து  பல்கலைகழக மாணவர் ஒன்றியம் எனும் புதிய அமைப்பொன்றை  ஸ்தாபித்துள்ளது.
பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியை மேற்கொள்ளும் பொருளாதார ரீதியாக சிரமப்படும்  மாணவர்களுக்கு உதவும் நோக்கோடு  இவ்வமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் ஆரம்பக்கூட்டம் அண்மையில் இடம் பெற்றது.
இதன் ஸ்தாபகத்தலைவராக
யாழ்ப்பாண பல்கலைகழகம் கலைப்பீட மாணவன்.எம்.முக்ஸித் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
செயளாலராக
கிழக்கு பல்கலைகழகம் மருத்துவ பீட மாணவன் எம்.எம்.பயாஸ் தெரிவி செய்யப்பட்டுள்ளார்.
மொறட்டுவ பல்கலைகழகம் பொறியியல் பீட மாணவன் அக்தாஸ் அப்ஸர் பொருளாலராகத்தெரிவு செய்யப்பட்டார்.
இதன் நிருவாக க்குழு உறுப்பினர்களாக பின் வருவோர் தெரிவு செய்யப்பட்டனர்.
அக்தர் ( இலங்கை சப்ரகமுக பல்கலைகழகம் பிரயோக விஞ்ஞான பீடம்)
 றஸ்லான் (யாழ்ப்பாண பல்கலைகழகம் தொழிநுட்ப பீடம் )
முஷாதிக்( இலங்கை வயம்ப பல்கலைகழகம் தொழிநுட்ப பீடம்)
பர்விஸ்(யாழ்ப்பாண பல்கலைகழகம் தொழிநுட்ப பீடம்)
இன்சாப் ( தென் கிழக்கு பல்கலைகழகம் பொறியல் பீடம்)
ஆசிக் (தென்கிழக்கு பல்கலைகழகம் பிரயோக விஞ்ஞான பீடம்)
இதே வேளை இவ்வமைப்பின் பிரதம ஆலோசகராக அல்ஹாபிழ் ஹாதிக் இப்றாஹிம்  தெரிவு செய்யப்பட்டுள்ளார்.