மையவாடி புனரமைப்புக்கான அபிவிருத்திப் பணி அங்குரார்ப்பண நிகழ்வு

ஹஸ்பர் ஏ ஹலீம்_

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் உறுப்பினர் ஏ.சீ.பைரூஸ் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து சின்னம் பிள்ளை சேனை மையவாடிக்கான மதில் அமைப்பதற்கு அடிக்கல் நடும் நிகழ்வு இடம் பெற்றது.
குறித்த நிகழ்வானது நேற்று (14) பிரதேச சபை உறுப்பினர் பைரூஸ் தலைமையில் இடம் பெற்றது பிரதம அதிதியாக பொதுஜனபெரமுனவின் பட்டினமும் சூழலும் பிரதேச சபை தவிசாளர் ஆர்.ஏ.டீ.எஸ்.D ரத்நாயக்க கலந்து கொண்டு அடிக்கல் நடும் நிகழ்வினை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
 இம் மதில் புனரமைப்புக்காக சுமார் 9 இலட்சத்து 84 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்களான வகார்தீன், விபூசன்,நிமல் குணவர்தன உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.