நிந்தவூர் பிரதேசத்தின் வீதி அபிவிருத்திப் பணிகளுக்காக 11 கோடி ரூபாய் நிதி

யாக்கூப் பஹாத்
கௌரவ பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்ச அவர்களின் பணிப்புரைக்கமைய ஒரு இலட்சம் கிலோமீட்டர் வீதிகளை அபிவிருத்தி செய்தல் எனும் திட்டத்திற்கமைய நிந்தவூர் பிரதேசத்தின் வீதி அபிவிருத்திப் பணிகளுக்காக 11 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் செங்கப்படை வீதி 3 KM(கிலோமீட்டர்) ,  அட்டப்பள்ளம் பெரிய தோட்ட வீதி 2KM(கிலோமீட்டர்) , தியேட்டர் வடக்கு வீதி 600M(மீட்டர்) ஆகிய வீதிகள்  அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

அந்த வகையில் இன்று(2021.11.13) முதற்கட்டமாக அட்டப்பள்ளம் பெரிய தோட்ட வீதியின் அபிவிருத்திப் பணிகளுக்கான  அடிக்கல் நாட்டு வைபவம் (2021.11.13) இன்று ஸ்ரீ  லங்கா சுதந்திரக் கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் முன்னால் வீதி அபிவிருத்தி அமைச்சின் பொது மக்கள் உரவுகள் மேன்பாட்டு அதிகாரி எம்.எம்.எம்.சஹீல் ஜேபி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
 மேலும் இந் நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் கௌரவ விமலவீர திஸாநாயக்க அவர்களின் செயலாளர் அஞ்சன திஸாநாயக்க மற்றும்
KLM.FAROOK மற்றும் ஸ்ரீ  லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னால் வேற்பாளர் சாறுக் மற்றும் நாசிர் மாஸ்டர் மற்றும் MUFAZIR JP ஆதரவாளர்களும் ஆகியோர் கலந்து சிறப்பிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது