திருமலை யுனைட்டெட் கிங்ஸ் விளையாட்டு கழகத்தின் புதிய சீருடை அறிமுகம்

திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்
திருகோணமலை யுனைட்டெட் கிங்ஸ்  விளையாட்டு கழகத்தின் புதிய சீருடை உத்தியோக பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டது

புதன்கிழமை திருகோணமலை நகராட்சி மன்ற  உள்ளக அரங்கில் கிழக்கு மாகாண விளையாட்டு பணிப்பாளர் ஜனாப்.என்.எம்.நவ்பீஸ் அவர்களினால் உத்தியோகப்பூர்வாமாக வெளியிடப்பட்டது

இவ் யுனைட்டெட் கிங்ஸ்  விளையாட்டு கழகம்  2007ஆம் ஆண்டு  எம் ஏ என் ரிஸ்மி,எம்.ஜே.எம் ஹிஷாம் மற்றும் ஜே,எம் நதிர் (சமாதான நீதவான்) ஆகிய மூவரினால் ஆரம்பிக்கப்பட்ட கழகம் பதின்நான்கு வருடங்கள் கடந்துள்ள நிலையில் மாவட்டத்த்தில் பல வீரர்களை உருவாக்கியுள்ளதுடன் பல பல சமூக செயற்ப்படுகளிலும் ஈடுபட்டு வருவதுடன்

இவ் யுனைட்டெட் கிங்ஸ்  விளையாட்டு கழக சீருடை வெளியீட்டு விழாவில் கிழக்கு மாகாண விளையாட்டு பணிப்பாளர்
ஜனாப்.என்.எம்.நவ்பீஸ்,யுனைட்டெட் கிங்ஸ் விளையாட்டு கழக தலைவருமாகிய என்.இம்ரான்,யுனைட்டெட் கிங்ஸ் விளையாட்டு கழக பணிப்பாளரும் திருகோணமலை நகராட்சி மன்ற உறுப்பினருமான ஜனாப். என்.எம்.மஹ்ஸூம்,மாவட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளர் திரு.உமாசுதன்,இளைஞர் சேவை உத்தியோகத்தர் ஜனாப். ஏ.எல்.அலாவுடீன் பாபு,யுனைட்டெட் கிங்ஸ் விளையாட்டு கழக சபை உறுப்பினர் ஜனாப்.வை.எம்,பஹ்மி மற்றும் கழக உறுப்பினர்கள்,வீரர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.