திருகோணமலையில் பெரும்போகத்திற்க்காக சேதன பசளைகள் பகிர்ந்தளிப்பு

திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்
திருகோணமலை – ஹொரவப்பொத்தானை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ரத்மலை பிரதேசத்தில் 147 கிராம சேவையாளர் பிரிவிலுள்ள விவசாயிகளுக்கான சேதனபசளைகள் வழங்கிவைக்கப்பட்டது

நேற்று (12) ரத்மலையில் இவ் சேதன பசளைகள் பகிர்ந்தளிக்கப்பட்டது.

விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் அனுர மற்றும் ரத்மலை விவசாய சங்கத்தினரால் குறித்த நிகழ்வு ஏட்பாடுசெய்யப்பட்டிருந்தது

சேதனபசளை மூலம் பெரும்போக வேளாண்மை செய்கையினை எவ்வாறு மேற்கொள்ளவது என்ற பல  கேள்விகளோடு விவசாயிகள் சேதன பசளைகளை எடுத்துச்சென்றதுடன்

குறித்த பகுதியில் இவ்வருட பெரும்போக வேளாண்மை மேற்கொள்வற்காக  1198 ஏக்கர் வயல் நிலங்கள்  காணப்படுவதாக விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் அனுர தெரிவித்தார்.