நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் இன்று (12) நாடாளுமன்றில் இன்று சமர்பிக்கப்படது. இதன் போது முன்மொழியப்பட்ட சில பிரதான விடயங்கள் பின்வருமாறு.
• பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்திற்கான கால எல்லை 5 வருடத்திலிருந்து 10 வருட காலம் வரை நீடிக்கப்பட்டுள்ளது.
• அரசாங்க அலுவலகங்களுக்கான புதிய கட்டுமானப் பணிகள் 2 வருடங்களுக்கு பிற்போடப்படும்.
• அரச நிறுவனங்களின் தொலைபேசிச் செலவுகள் 25 வீதத்தால் குறைக்கப்படும். சூரிய சக்தியை தேவைக்கேற்ப பயன்படுத்துவதற்கான பிரேரணைகள் தயாரிக்கப்படும்.
• அரச ஊழியர்களின் ஓய்வூதியத்தில் உள்ள திருத்தங்கள் மற்றும் முரண்பாடுகளை நீக்கி புதிய சம்பளக் கட்டமைப்பொன்று உருவாக்கப்படும்.
• அரச ஊழியர்களின் ஓய்வூதிய வயதெல்லை 65 வயது வரை நீடிக்கப்படும்.
• அத்துடன்இ பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்திறகான கால எல்லை 5 வருடத்திலிருந்து 10 வருட காலம் வரை நீடிக்கப்பட்டுள்ளது.
• அரச ஊழியர்களுக்கு உந்துருளி கொள்வனவு செய்ய நிதி ஒதுக்கீடு.
• அரச நிறுவனங்களின் தொலைபேசிச் செலவுகள் 25 வீதத்தால் குறைக்கப்படும். சூரிய சக்தியை தேவைக்கேற்ப பயன்படுத்துவதற்கான பிரேரணைகள் தயாரிக்கப்படும்.
• நாட்டில் வயதானவர்களின் எண்ணிக்கையை கருத்திற்கொண்டு ஓய்வு ஓதியம் பெறாதவர்களுக்கு ஓய்வூதிய கொடுப்பனவு முறையொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக அரசாங்கம் ஆரம்பகட்ட நிதியாக ரூபா 100 மில்லியன் வழங்க உள்ளது.
• முச்சக்கரவண்டி துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பு கிடைக்கின்றது. இத் துறையில் சுமார் 7 இலட்சம் முச்சக்கரவண்டிகள் நாட்டில் செயல்படுகின்றன. இவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதந்காக அதிகார சபையொன்றும் அமைக்கப்பட உள்ளது
ஓய்வூதிய கொடுப்பனவு முறையொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக அரசாங்கம் ஆரம்பகட்ட நிதியாக ரூபா 100 மில்லியன் வழங்க உள்ளது.