பொத்துவிலைச் சேர்ந்த சட்ட முதுமாணி ஏ.எஸ். ஹிபத்துல்லாஹ் தேசிய ரீதியில் முதலிடம் பெற்று கௌரவ நீதவானாக நியமனம்

நிந்தவூர் நிருபர்
ஏ.பி. அப்துல் கபூர்
நீதிச் சேவை ஆணைக்குழு தேசிய ரீதியில் அண்மையில் நடாத்திய போட்டிப் பரீட்சையில் தோன்றி தேசிய ரீதியில் முதலிடம் பெற்று நீதவானாக சட்ட முதுமாணி அப்துல் சமது ஹிபத்துல்லாஹ் அவர்கள் நியமனம் பெறவுள்ளார்.

எம்.எல். அப்துல் சமது (ஓய்வு பெற்ற தபால் ஊழியர்) மற்றும் எம்.எல். உம்முசல் பீவி தம்பதியினருக்கு நான்காவது பிள்ளையாக பிறந்த இவர் பொத்துவில் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாடசாலைக் கல்வியில் சிறந்து விளங்கிய இவர் உயர்தர பரீட்சையில் சிறப்பாக சித்தியெய்ததன் காரணமாக தனது  உயர் கல்வியைப் பேராதனைப் பல்கலைக் கழகத்தின் சட்ட பீடத்தில் ஆங்கில மொழி மூலம் பயின்று சட்ட இளமாணிப் பட்டம் பெற்றார்.
மேலும்,  தனது அறிவுத் தாகத்தைப் பெருக்கிக் கொண்டே செல்லும் இவர் கொண்டுள்ள தகைமைகளாக;
LLM in Criminal Justice (OUSL),
LLB (Peradiniya),
Dip. in Forensic Medicine (Col),
Dip in Death Investigation (Col),
Advance Dip in Transitional Justice (BCIS),
Dip in Sign Language (NIE),
Dip in Translation Interpretation (Kelani),
Dip in Sinhala (Kelani) இவற்றைக் குறிப்பிடலாம்.
சட்டத்துறையில் கொண்ட ஈடுபாடு காரணமாக சட்டமா அதிபர் திணைக்களத்தில் கடந்த 2016 ம் ஆண்டு முதல் அரசாங்க சட்டத்தரணியாகக் கடமையாற்றி தனது கடமையினை நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் நிறைவேற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அரச சட்டத்தரணியாகக் கடமையாற்றி வந்த நிலையிலேயே நீதிச் சேவை ஆணைக்குழு நடாத்திய போட்டிப்பரீட்சையில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்று நேர்முகத் தேர்விலும் சித்தியெய்தி நீதவானாக நியமனம் பெறவுள்ளார். இவரது இந்த இமாலய வெற்றிக்கு அவருக்கு உறுதுணையாக நின்று தோள் கொடுத்த அவரது பாரியார் சட்டத்தரணி எம்.எம்.பாத்திமா ஷிஹாரா மற்றும் ஏனைய குடும்பத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். இவரது உயரிய சாதனைக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றமை  குறிப்பிடத்தக்க விடயமாகும்.