(எருவில் துசி)களுதாவளை பிரதேச சபைக்கான 2022ம் ஆண்டுக்கான பாதீடு தவிசாளர் ஞா.யோகநாதன் அவர்களின் தலைமையில் சபையின்
உறுப்பினர்களின் ஆசியுடன் சபைக்கு இன்று(11) சமர்பிக்கப்பட்டது.
வரவு செலவு அறிக்கை இன்று 10.00மணிக்கு தவிசாளர் அவர்களின் ஆசியுடன் சபைக்கு முன்வைக்கப்பட்டபோது சபையில் உள்ள
வரவு செலவு திட்டத்தை ஆராய்ந்த உப தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் அதனை ஏற்றுக்கொண்டதுடன் 2022ம் ஆண்டுக்கான செயற்பாடுகளையும்
வேலைத்திட்டங்களையும் சிறப்பாக முன்னெடுக்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்தனர்.
பாதீடு தொடர்பாக கருத்து தெரிவித்த மே.வினோராஜ் அவர்கள் சில விடயங்கள் சேர்த்துக்கொள்ளப்படாமை காரணமாக வருகின்ற மாதம் வரவு செலவு அறிக்கையினை சீர்செய்து சமர்பிக்குமாறு வேண்டிக்கொள்ள சபையில் உப தவிசாளர் க.றஞ்சினி அவர்கள் அவற்றுக்கான ஒதுக்கீடு உள்ளதாக சுட்டிக்காட்ட அவர் ஏற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
இதனை அனைத்து உறுப்பினர்களும் ஏற்றுக்கொள்ள எதிர் கட்சி ஆளும் கட்சி என்ற பேதமின்றி சபைக்குரிய 19 உறுப்பினர்களும்
ஏகமனதாக ஏற்றுக்கொள்ள பாதீடு நிறைவேற்றப்பட்டது.
நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னால் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா அவர்களும் பார்வையாளராக கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.