(வி.சுகிர்தகுமார்) இந்த நாட்டினுடைய இரண்டு இலட்சத்தி 60 ஆயிரம் ஆசிரியர் அதிபர்களின் சம்பள முரண்பாட்டை தீர்த்து வைத்த ஜனாதிபதி பிரதமர் கல்வி அமைச்சர் நிதி அமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக இலங்கை ஜனநாயக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஏ.பி.கமால்தீன் தெரிவித்தார்.
இன்று அக்கரைப்பற்றில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
கடந்த 24 வருடகாலமாக ஆசிரியர்கள் அதிபர்கள் சம்பள முரண்பாட்டை தீர்க்குமாறு போராடியபோது ஆட்சியில் இருந்தவர்கள் ஒருவர் மீது ஒருவர் மறைந்து பொறுப்பை மற்றவர்கள் மீது சுமத்தி மறைந்திருந்தனர்.
கடந்த 24 வருடகாலமாக ஆசிரியர்கள் அதிபர்கள் சம்பள முரண்பாட்டை தீர்க்குமாறு போராடியபோது ஆட்சியில் இருந்தவர்கள் ஒருவர் மீது ஒருவர் மறைந்து பொறுப்பை மற்றவர்கள் மீது சுமத்தி மறைந்திருந்தனர்.
ஆனால் பொதுஜன பெரமுன அரசாங்கம் கொரோனாவிற்கு மத்தியிலும் ஆசிரியர் அதிபர்களின் பிரச்சினையை நன்குணர்ந்து அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் எடுத்த முயற்சியை சங்கத்தின் சார்பாக பாராட்டுகின்றேன்.
இந்த நாட்டில் உள்ள 45 இலட்சத்திற்கும் மேலான மாணவர்களின் நன்மை கருதி அவர்களின் கல்வி நடவடிக்கையினை முன்கொண்டு செல்லும் வகையிலும் ஆசிரியர்கள் அதிபர்கள் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்குமாக மூன்று தடவைகளில் வழங்க இருந்த சம்பள உயர்வை ஒரே தடவையில் உயர்த்த இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இதற்காக இந்த வரவு செலவுத்திட்டத்தில் 7.51 வீதமான 30 ஆயிரம் மில்லியன் தொகையை ஒதுக்கி அதிபர் ஆசிரியர்களின் முரண்பாட்டை தீர்க்க முன்வந்தமைக்கு நன்றி கூறுகின்றோம்.
இதேநேரம் எமது போராட்டத்திற்கு வித்திட்ட புத்திஜீவிகள் தொழி;ற்சங்கங்களின் பிரதிநிதிகள் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.
இச்சந்திப்பில் சங்கத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இச்சந்திப்பில் சங்கத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.