தம்பலகாமம் பிரதேச சபையின் புதிய உறுப்பினராக நஜீபுள்ளா பதவிப் பிரமானம்

(ஹஸ்பர் ஏ ஹலீம்) தம்பலகமம் பிரதேச சபையின் மக்கள் காங்கிரசின்  புதிய உறுப்பினராக  இக்பால் நஜீபுள்ளா அவர்கள் தவிசாளர் ஏ.ஜீ.சம்பிக்க பண்டார முன்னிலையில் இன்று (11)காலை பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினராக செயற்பட்ட முன்னால் உறுப்பினர் ஆர் .எம்.றெஜீன் பதவி விலகியதையடுத்து சுழற்சி முறையில் உறுப்பினராக இவர்  நியமனம் செய்யப்பட்டார்.
இப் பதவிப் பிரமாண நிகழ்வில் தம்பலகமம் பிரதேச சபை செயலாளர் திரு. எஸ்.என்.எம். நிஜாம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சேருவில தேர்தல் தொகுதி அமைப்பாளர் ஆசிரியர் எம்.எஸ். ஐயூப் கான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.