சந்தைக்கு வரும் மக்களின் வருகையில் வீழ்ச்சி 

(எச்.எம்.எம்.பர்ஸான்) கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட செம்மண்ணோடையில் இயங்கி வரும் வாராந்த சந்தைக்கு வரும் மக்களின் வருகையில் வீழ்ச்சி அடைந்துள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள திடீர் விலை அதிகரிப்பு காரணமாகவே மக்களின் வருகை குறைவடைந்துள்ளதாக வியாபாரிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.
வியாபார நடவடிக்கைகளுக்காக தூர இடங்களில் இருந்து வரும் நாம் போதிய இலாபமின்றி திரும்பிச் செல்வதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.