மட்டக்களப்பு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு உற்பத்தித்திறன் விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டன

smart
(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளின் தரத்தினை உற்பத்தித்திறன் எண்ணக்கரு செயற்பாடுகளினூடாக மேலும் மேம்படுத்தவதற்காக  செயலக உத்தியோகத்தர்களுக்கு விசேட பயிற்சிகள் இன்று (08) வழங்கப்பட்டன.
மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இப்பயிற்சி கருத்தரங்கில் தகவல் தொடர்பாடல், தொழினுட்ப வசதிகளினூடாக  புதிய செயலிகளை உருவாக்கி மாவட்ட செயலகத்தினால் வழங்கப்படும் சேவைகளை மேலும் துரிதப்படுத்தவும், தரவுகள் தகவல்களை பேணவும், பரிமாற்றம் செய்யவும் இதன்போது ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந் தலைமையில் இடம்பெற்ற இவ்விசேட பயிற்சி கலந்துரையாடலில் உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவேஸ்வரன், மாவட்ட செயலக உள்ளக கணக்காய்வாளர் திருமதி. இந்திரா மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் அரச நிறுவனங்களுக்கிடையிலான உற்பத்தித்திறன் போட்டித் தொடரில் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் பங்கேற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து இம்மாவட்ட செயலகத்தினால் வழங்கப்படும் சேவைகளின் தரத்தில் மேலும் மேம்படுத்தல்களை ஏற்படுத்தவும், பொதுமக்கள் மற்றும் சேவை நாடிகள் தமது சேவைகளை இலகுவாகவும், தகவல் தொழினுட்ப வசதிகளினூடாகவும் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பான ஆலோசனைகளும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.
மாவட்ட செயலகத்தின் பதவிநிலை உத்தியோகத்தர்கள், பதநிலை உதவியாளர்கள் மற்றும் தரவட்ட தலைவர்களுக்கு வழங்கப்பட்ட இப்பயிற்சி நெறி மாவட்ட செயலக உற்பத்தித்திறன் மேம்பாட்டு பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது உற்பத்தித்திறன் மேம்பாட்டுப் பிரிவு மாவட்ட இணைப்பாளர் ஆர். புவனேந்திரன் மற்றும் உற்பத்திதத்திறன் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் வளவாளர்களாக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

smart
smart
smart