திருக்கோவில் கல்வி வலயத்தில் 45 பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கை

வி.சுகிர்தகுமார்

திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட 10 ஆம் ஆண்டு தொடக்கம் 13ஆம் ஆண்டு வரையிலான 18 பாடசாலைகளில் மாணவர்களது கற்றல் நடவடிக்கைகளும் இன்று ஆரம்பிக்கப்பட்டதுடன் 45 பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கை இடம்பெற்றதாக வலயக்கல்விப்பணிப்பாளர் யோ.ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.
சுமார் 6 மாதங்களின் பின்னர் உயர்தர கல்வி நடவடிக்கை ஆரம்பமான சகல பாடசாலைகளிலும் இன்று மாணவர்கள் ஆர்வத்துடன் வருகை தந்ததுடன் அதிபர் ஆசிரியர்களும்; சமூகமளித்திருந்தனர்.
பாடசாலைகளில் 98 வீதமான அதிபர்கள் சமூகமளித்துள்ள நிலையில் 88 வீதமான ஆசிரியர்களும் 80 வீதமான மாணவர்களும் வருகை தந்துள்ளதாக வலயக்கல்விப்பணிப்பாளர் யோ.ஜெயச்சந்திரன் மேலும் குறிப்பிட்டார். கல்வி அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய இன்று 45 பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கை இடம்பெற்ற நிலையிலேயே இவ்வாறு ஆசிரியர்களும் மாணவர்களும் சமூகமளித்துள்ளதாக அவர் கூறினார்.
இதற்கமைவாக இன்று காலை முதல் திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று இராமகிருஸ்ண தேசிய பாடசாலைக்கு மாணவர்கள் ஆர்வத்துடன் சமூகமளித்ததை காண முடிந்தது.
பாடசாலையின் முன் வாயிலில் சுகாதார நடைமுறைகள் தொடர்பான தகவல்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.அத்தோடு பாடசாலையில் உள்நுழையும் மாணவர்கள் யாவரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றியதைஅவதானிக்க முடிந்தது.
மாணவர்கள்யாவரும் முகக்கவசம் அணிந்திந்ததுடன் கைகளுவும் செயற்பாடுகளிலும் ஈடுபட்டனர். இதேநேரம்அதிபர், ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்விசார பாடசாலை உத்தியோகத்தர்களும் ஊழியர்களும்;பாடசாலைக்கு சமூகமளித்திருந்தனர்.