விதைகள் இலவசமாக பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்வு

????????????????????????????????????

பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி மற்றும் மனைசார் கால்நடை வளர்ப்பு சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பாசிப்பயறு பயிர் செய்கை திட்டத்தில் பாசிப்பயறு விதைகள் இலவசமாக பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.

அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினரும், பிரதேச அபிவிருத்திக்குழு இணைத் தலைவருமான நசீட் அஹமட்டின் வேண்டுகோளில் ஓட்டமாவடி மற்றும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் வழங்கும் பாசிப்பயறு விதைகள் இலவசமாக பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்வு ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் இன்று இடம்பெற்றது.

ஓட்டமாவடி பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும், பிரதேச அபிவிருத்திக்குழு இணைத் தலைவருமான நசீட் அஹமட்டின் இணைப்பு செயலாளர் ஏ.ஏ.நாசர், ஓட்டமாவடி இணைப்பாளர் பி.எம்.எம்.காசீம், கோறளைப்பற்று மத்தி இணைப்பாளர் எம்.ஜவாத், செயலக விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எம்.எம்.அஸ்பர், ரி.மோகனரூபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 12 நபர்களுக்கு அரை ஏக்கருக்கு ஆறு கிலோ கிராம் வீதம் பயறு நூற்றி பதினொரு கிலோ கிராம் பயறு வழங்கி வைக்கப்பட்டதுடன், 21 நபர்களுக்கு அரை ஏக்கருக்கு ஆறு கிலோ கிராம் வீதம் உழுந்து இருநூற்றி பதினாறு கிலோ கிராம் உழுந்து வழங்கி வைக்கப்பட்டது.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 11 நபர்களுக்கு அரை ஏக்கருக்கு ஆறு கிலோ கிராம் வீதம் பயறு முப்பத்தி எட்டு கிலோ கிராம் பயறு வழங்கி வைக்கப்பட்டதுடன், 07 நபர்களுக்கு அரை ஏக்கருக்கு ஆறு கிலோ கிராம் வீதம் உழுந்து இருபத்தியொரு கிலோ கிராம் உழுந்து வழங்கி வைக்கப்பட்டதாக உதவித் திட்டப் பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ் தெரிவித்தார்.

????????????????????????????????????
????????????????????????????????????