விவசாயிகளின் கவனயீர்ப்பு போராட்டம் வாழைச்சேனையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது

க.ருத்திரன்
தடுக்காதே தடுக்காதே விவசாய வருவாயை தடுக்காதே,சிதைக்காதே சிதைக்காதே விவசாயிகளின் நம்பிக்கையை சிதைக்காதே’
என்ற வாசகங்களுடன் இன்று காலை விவசாயிகளின் கவனயீர்ப்பு போராட்டம் வாழைச்சேனையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது.

 தங்களுக்கு சேதனப் பசளையுடன் 50 வீதம் இரசாயன உரம் தேவையென வலியுறுத்தி நாட்டின் ஜனதிபதிக்கு தங்களது விடயத்pனை வெளிப்படுத்தும் முகமாக உழவு இயந்திரங்களில் ஊர்வலமாக பேரணியானது மட்டக்களப்பு பிரதான வீதி வழியாக கிரான்,செங்கலடி,வீதி ஊடாக மட்டக்களப்பை சென்றடையவுள்ளது.
இதேபோன்று செங்கலடி உறுகாமம் பிரதேச விவசாயிகள் கொக்கட்டிச்சோலை,வவுணதீவு விவசாயிகளும் கல்லடி பால வீதி வழியாக மட்டக்களப்பு நகரை சென்றடைந்து எல்லோரும் ஒன்று சேர்ந்து இரசாயனப் பசளையின் அவசியம் தொடர்பாக தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தவுள்ளனர்.