கல்முனை பிரதேச இளைஞர்களுக்கான நல்லிணக்க பயிற்ச்சிப்பட்டறை

(எம்.என்.எம்.அப்ராஸ் )

சமாதானம் மற்றும் சமூக பணி நிறுவனத்தினால் (PCA)  அதன் அனுசரணையில் இயங்கி வரும் கல்முனை பிரதேச   நல்லிணக்க மன்றங்ககளின் இளைஞர்  குழு  உறுப்பினர்களுக்கான  நல்லிணக்க பயிற்ச்சிப்பட்டறை நிகழ்வு அம்பாறை மாவட்ட நல்லிணக்க மன்றத்தின்  இனைப்பாளர்  எஸ்.எல்.ஏ.அஸீஸ் இணைப்பில் இன்று (07)கல்முனையில்  நடைபெற்றது.

இதன் போது பிரதேச இளைஞர் மன்றங்களின் மூலம் சமுக  ரீதியில்  நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், அதன் முக்கியத்துவம் பற்றிய தெளிவூட்டல் ,நல்லிணக்கத்தை கொண்டு செல்வதற்க்கு  மேற்க்கொள்ள வேண்டிய வழிமுறைகள்  மற்றும் நல்லிணக்கத்தை சாவலுக்கு உட்படுத்தும் விடயங்கள் அதற்கான்  தீர்வுகள் பற்றி  கலந்தோலாசிக்கப்பட்டு கருத்துரைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வளவாலர்களாக சமாதானம் மற்றும் சமூக பணி அமைப்பின்(PCA) முகாமையாளர் டி.இரஜந்திரன் , அரச சார்பற்ற நிறுவனங் களின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஐ. எல். எம். இர்பான் , எம். எஸ்.  ஜெலீல், சமாதான சமுக பணி அமைப்பின் நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் எம்.எல்.ஏ.மாஜீத்,  பிரதேச இளைஞர் நல்லிணக்க  மன்றங்ககளின் இணைப்பாளர்கள் துறை சார்ந்த இளைஞர்கள் ,யுவதிகள்  ஆகியோர் கலந்து கொண்டனர்.