கிரான் – ஊத்துச்சேனை கிராமத்தில்  குடியிருப்புக்களை சேதப்படுத்திவரும் காட்டு யானைகள்!!

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஊத்துச்சேனை கிராமத்தில் தொடர்ச்சியாக மக்கள் குடியிருப்புக்களை காட்டு யானைகள் சேதப்படுத்திவருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.கிராமத்திற்குள் தொடர்ச்சியாக புகும்  காட்டு யானைகள் தென்னை உள்ளிட்ட பயன்தரும் மரங்களை சேதப்படுத்திவருவதுடன், மக்கள் குடியிருப்புக்களுக்கும் சேதம் விளைவித்து வருகின்றது.

தொடர்ச்சியாக குடியிருப்புக்களை நோக்கி காட்டு யானைகள் வருவதனால் தாம் உயிர் மற்றும் உடைமை அச்சுறுத்தலுக்கு மத்தியில் வாழ்ந்துவருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.