ஞானசார தேரரின் நியமனம் முஸ்லீம் லீக் கண்டனம்.

(எம்.ஐ.எம்.றியாஸ்)
” ஒரே நாடு ஒரே சட்டம்” செயலணிக்கு பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில், ஜனாதிபதி மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்ற தீர்மானம் அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணி களின் அம்பாறை மாவட்ட சம்மேளத்தினால் எடுக்கப்பட்டது.
அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணிகளின் அம்பாறை மாவட்ட சம்மேளத்தின் தலைவர் எம்.எம்.அஜ்வத் தலைமையில் நேற்று முன்தினம் (04) “எங்கள் வீட்டில் ஒரு குட்டி.த் தோட்டம்” என்ற ஒரு நாள் விசேட செயலமர்வு சம்மாந்துறை காரியாலயத்தில் நடைபெற்றது.
இதன்போது  ஒரே நாடு ஒரே சட்டம்” செயலணிக்கு பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைவராக நியமிக்கப்பட்ட விடயம் தொடர்பில் சம்மேளத்தின் உறுப்பினர்களால் கவலையும் கண்டனமும் வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நியமனம் தொடர்பில் மீள் பரிசீலனை செய்யுமாறு கோரும் மகஜர் ஒன்றினை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர்களுக்கு அனுப்புவதற்கான தீர்மானமும் இங்கு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
நாட்டுக்கும், ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் நல்லாசி வேண்டி விசேட துஆப் பிரார்த்தனையை கிழக்கிலங்கை அரபுக் கல்லூரியின் பொதுச் செயலாளர் மௌலவி யூ.எம்.நியாஸினால் மேற்கொள்ளப்பட்டது.
அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணிகளின் அம்பாறை மாவட்ட சம்மேளத்தின் ஆலோசகராக இருந்து இம்மாதம் மரணித்த எஸ்.எல். கலந்தர், எம்.எம்.இசட்.அமீர், ரீ.எல்.எம்.றஹீம், ஏ.சீ.ஏ.கபூர் ஆகியோர்கள் பற்றி இரங்கல் உரையினை அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணிகளின் முன்னாள் தேசியத் தலைவரும், தற்போதைய நிறைவேற்றுப் பணிப்பாளருமான எம்.ஐ.உதுமாலெப்பை ஆற்றினார்.
இதன் போது அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணிகளின் அம்பாறை மாவட்ட சம்மேளத்தின் தலைவர் எம்.எம்.அஜ்வத்தின் அர்ப்பணிப்புகளுடனான சமூகப் பணிகளைப் பாராட்டி மாவட்ட ஆலோசகர்களால்  நினைவுப்பரிசு  வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
இச் செயலமர்வில் அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணிகளின் அம்பாறை மாவட்ட சம்மேளத்தின் செயலாளர் எம்.ஐ.சிராஜுதீன், பொருளாளர் ஏ.ஏ.பைறூஸ் உட்பட பதவி வழி உத்தியோகத்தர்கள், மாவட்ட ஆலோசகர்கள் எனப் பலரும் .கலந்து கொண்டனர்.