திருகோணமலை குடாக்கரை பிரதேசத்தில் மக்கள் பாவனைக்காக வீதி மின் விளக்குகள் கையளிப்பு.

திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்
திருகோணமலை குடாக்கரை பிரதேசத்தில்   பல வருட காலமாக பொருத்தப்படாமலும்,  செயழிலந்தும் காணப்பட்ட வீதி மின் விளக்குகள் இரண்டாம் கட்டமாக திருத்தப்பட்டும புதிய வீதி மின்விளக்குகள் பொருத்தப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

குடாக்கரை பிரதேசத்தின்  முக்கிய இடங்களில் வீதி மின் விளக்குகள் தேவையாக உள்ளது எனவும், சில இடங்களில் செயழிலந்து காணப்படுவதாகவும், பொதுமக்களும் சங்கங்களும் திருகோணமலை பட்டினமும், சூழலும் பிரதேச சபை கௌரவ உப தவிசாளர் ஏ.எல்.முகம்மட் நௌபரிடம் முறையிட்டு இருந்தனர்.

அதனை நேரில் சென்று பார்வையிட்டதுடன், திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடனும் குடாக்கரை வெள்ளைமணல்,  வட்டாரத்துக்கு உட்பட்ட நீரோட்டுமுனை,ஜெய்னுதீன் ஹாஜியார் வீதி, நாச்சிக்குடா மக்குளூற்று, திமுதுகம,கருமலையூற்று, சின்னம்பிள்ளைசேனை, கரடிப்பூவல், மற்றும் ஹிஜ்ரா நகர் கிராமங்களில் பழுதடைந்துள்ள  வீதி மின்விளக்குகள் திருத்தப்பட்டும், ஏனைய பகுதிகளில் புதிய வீதி மின்விளக்குகள் பொருத்தப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது

இதன்போது எஞ்சிய வீதிகளுக்கான வீதி மின் விக்குகள் பொருத்தும் நடவடிக்கை  மூன்றாம்  கட்டமாக தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும்.எனவும் பட்டினமும் சூழலும் பிரதேச சபை கௌரவ உப தவிசாளர் ஏ.எல். முகம்மட் நௌபர் இதன்போது உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்க்கது