திருக்கோணமலை பாலையூற்று முருகன் கோவிலடி பகுதியில் மழை காரணமாக, மண்சரிவு அனர்த்தம்

ஹஸ்பர் ஏ ஹலீம்_

திருக்கோணமலை பாலையூற்று முருகன் கோவிலடி பகுதியில் நேற்றைய தினம் ஒன்பது மணி அளவில் 3 நாட்களாக தொடர்ந்து பொழிந்து வந்த மழை காரணமாக, மண்சரிவு அனர்த்தம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சமயத்தில் வீட்டை சேர்ந்தோர் முற்றத்தில் வேறு வேலைகளில் ஈடுபட்டிருந்தமையினால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இருப்பினும் வீட்டின் மூன்று அறைகளும், கழிவறையும் சேதமடைந்ததுடன், சுமார் 5 மீட்டர் தூரத்திற்கு மண் சரிந்து விழுந்துள்ளது.
வாழைக்கன்றுகள் உட்பட மரக்கன்றுகளும், கோழிக்கூடு ஒன்றும் முற்றாக சேதமடைந்துள்ளது.