கவிஞர் மேராவின் ஆறு நூல்கள்  வெளியீடும் அறிமுகமும்.

கவிஞர் மேராவின் ஆறு நூல்கள்  வெளியீடும் அறிமுகமும்

(படுவான் பாலகன்) பட்டிப்பளைப் பிரதேச கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கவிஞர் மேராவின் ஆறு நூல்கள்  வெளியீடும் அறிமுகமும் எதிர்வரும் சனிக்கிழமை(06) காலை 9மணிக்கு முனைக்காடு உக்டா சமூவளநிலையத்தில் நடைபெறவுள்ளது.

கவிஞர் சோலையூரான் ஆ.தனுஸ்கரன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், பின்காலனித்துவ நோக்கில் ஈழத்துத் தமிழ்க்கவிதைகள், பன்முகநோக்கில் ஈழத்துப் புகலிடத் தமிழ் இலக்கியம், சங்க இலக்கியம் சில பார்வைகள், கொல்லப்பட்ட எங்களது வாக்குமூலம்( கவிதைத்தொகுதி) மனமாற்றம் (சிறுகதைத்தொகுதி), பாடி மகிழ்வோம் (சிறுவர் பாடல்கள்) ஆகிய ஆறு நூல்களின் வெளியீடும், அறிமுகமும் இடம்பெறவுள்ளன.

இந்நூல்களின் முதல்பிரதியை தங்கமலர் வடிவேல் பெற்றுக்கொள்ளவுள்ளதுடன், பேராசிரியர் மா.செல்வராசா, பேராசிரியர் செ.யோகராசா ஆகியோர் பிரதம அதிதிகளாகவும் கலந்துகொள்ளவுள்ளனர். நூல் அறிமுகவுரைகளை பேராசிரியர் செ.யோகராசா, கவிஞர் த.மலர்செல்வன், அருள் கருணா, கவிஞர் அரசையூர் பகீ ஆகியோர் நிகழ்த்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.