அடுத்த வருடம் பொருட்களின் விலைவாசிகள் குறைவடைந்து நாடு பழைய நிலைக்கு திரும்பி விடும்

(ந.குகதர்சன்)
பிரதமர் விவசாயிகளை மதிக்கின்றவர் அரசாங்கத்தை விமர்சிப்பது இலகுவானது எமது மக்களுக்கு நன்மையை செய்ய வேண்டுமென நினைத்து பணி செய்பவர் எமது ஜனாதிபதி மாவட்ட பொதுஜன பெரமுன கட்சியின் அமைப்பாளர் ப.சந்திரகுமார் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் சௌபாக்கியாத் திட்டத்தின் விவசாய அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வரும் சௌபாக்கியா வீட்டுத் தோட்ட பயிர்ச்செய்கை வார நிகழ்வு மண்டபத்தடி விவசாய விரிவாக்கல் அலுவலகத்தில் இடம் பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு  கருத்து தெரிவித்தார்.
ஜனாதிபதியின் திட்டமானது நஞ்சற்ற உணவுகளை மக்களுக்கு சௌபாக்கியாத் திட்டத்தின் ஊடாக பெற்றுக்கொடுப்பதேயாகும்.
 மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வவுணதீவு பிரதேசத்திற்கு ஜனாதிபதி வர இருந்தார். ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தினால் அவ்விஜயம் இடம் பெறவில்லை நிச்சயம் ஒரு நாள் வருவார் அப்போது இப்பகுதி பாரிய அபிவிருத்தியடையும் என எனக்கு நம்பிக்கையுள்ளது
 இப்பகுதி விவசாயிகளுக்கு தேவையான வாழ்வாதார உதவிகளை செய்ய நாம் காத்திருக்கின்றேம்.
எமது நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த கொரோனா நெருக்கடி காரணமாக பொருட்களின் விலைவாசிகள் அதிகரித்துள்ளதாக எதிர் கட்சிகள் ஆர்பாட்டங்களை முன்னெடுத்தாலும் இவையெல்லாம் வரும் வரவு செலவு திட்டத்தின் பின்பு வரும் வருடம் 2 மாத அளவில் பொருட்களின் விலைவாசிகள் குறைவடைந்து நாடு பழைய நிலைக்கு திரும்பி விடும்
 ஜனாதிபதி பிரதமர் நிதியமைச்சர் விவசாயிகளை மதிக்கின்றவர்கள் எனவே உரத்தின் விலையை அவர்தான் முதலில் விலை குறைத்தவர் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளை அதிகம் வழங்கியவர் நாட்டின் தற்போதைய நிலைமையை மக்கள் நன்கு விளங்கி கொள்ள வேண்டும்.
தமிழ் தேசியகூட்டமைப்பு கட்சி ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு விடயத்தை எடுத்து இனவாதத்தை விதைப்பார்கள் நாங்கள் ஏதாவது எமது மக்களுக்கு நன்மையை செய்ய வேண்டுமென நினைத்து பணி செய்பவர்கள் என்றார்