(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)
காத்தான்குடி அறிவிப்பாளர்கள் போரம் மற்றும் பிரதேச செயலக கலாசாரப் பிரிவு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த மீலாத் விழா நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் அஷ்ஷஹீத் அஹமட் லெப்பை ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
இந் நிகழ்வில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் மெளலவி எம்.ஏ.ஆதம்லெப்பை (பலாஹி) பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்ததுடன் அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா சபை காத்தான்குடி கிளை தலைவர் அஷ்ஷேய்ஹ் ஏ.எம்.ஹாறூன் (ரஷாதி) கெளரவ அதிதியாக கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளார்.
மாணவர்களின் நிகழ்வுகள் மற்றும் கலைஞர்கள் இஸ்லாமிய பாடல்கள் என நிகழ்வை அலங்கரித்ததுடன் அறிவிப்பாளர்கள் போரத்தின் மார்க்க ஆலோசகர் அஷ்ஷேய்க எம்.ஐ.எம்.மசூத் அஹ்மத் (ஹாஷிமி) அவர்களின் நபிகளாரின் போதனைகள் மற்றும் வாழ்க்கை திட்டங்கள் தொடர்பிலான சிறப்புரையும் இடம்பெற்றுள்ளது.
அத்துடன் மாணவர்கள், உறுப்பினர்களுக்கான பரிசில்கள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மார்க்க அறிஞர்கள், கலாசார உத்தியோகத்தர்கள், கல்வியியாளர்கள், சமூக ஆர்வலர்கள், கலைஞர்கள், மாணவர்கள், பெற்றார்கள் என பலரும் கலந்து கொண்ட அதேவேளை சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்ப நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.