திருமலையில் யானைப்பாதுப்பு உயிர் வேலியாக பனைவேலியினை அமைக்கும் திட்டம்

யானைக்கும்  மனிதருக்கும் இடையிலான முரண்பாட்டைத் தடுக்கும் உயிர்வேலியாக, யானைத்தடுப்பு வேலியான பனைவேலி அமைத்தல்.!
(அ . அச்சுதன்)
திருகோணமலை மாவட்டத்தில் ஈச்சலம்பற்று, பூநகர் பகுதியில் உள்ள பனிச்சம்குளக் கட்டோரத்தில்  யானைப்பாதுப்பு உயிர் வேலியாக பனைவேலியினை அமைக்கும் திட்டம் “எதிர்காலப் பசுமை உலகு” மற்றும் “திருகோணமலை பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான சங்கம் ” இணைந்து  1200 பனைவிதைகளை நட்டு சுமார் ஒரு கிலோமீற்றர் தூரவேலிக்கான ஆரம்பப் பணியினை தொடங்கிவைத்தது.
தொடர்ச்சியாக  யானை அச்சுறுத்தல் உள்ள, வேலி அமைக்க வேண்டிய பகுதிகளில் தூரநோக்குக்கொண்ட, நீடித்து நிலைக்கும், உயிர்ப் பல்வகையினைப் பேணக்கூடிய, இயற்கை நேயப் பண்புகொண்ட, சிக்கனமான, எவரும் இலகுவில் செயற்படுத்தக்கூடிய  திட்டத்தினை முன்னெடுக்கும் நேக்கில் குறித்த நிகழ்வில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான நிதியத்தின் தாபகர் க . தேவகடாட்சம் எதிர்காலப்பசுமை உலகின் செயலாளர் க. துஷ்யந்தன் அவர்களும் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டு நடுகையினை மேற்கொண்டனர்.