கல்லாற்றில் கடினப்பந்து விளையாடுவதற்கு வாய்ப்பு.( Video)

பெரியகல்லாறு விளையாட்டு மைதானத்தில் கடினப்பந்து விளையாடுவது தொடர்பாக கடந்த மூன்று மாதமாக ஏற்பட்டு வந்த சர்ச்சைக்கு இன்று (29) பிரதேச சபையின் விஷேட சாதாரன கூட்டத்தில் தீர்வு கானும் பொருட்டு தவிசாளர்
ஞா.யோகநாதன் தலைமையில் ஆராயப்பட்டது.

பெரியகல்லாறு விளையாட்டு மைதானத்தில் கடினப்பந்து விளையாடுவதனால் பாதிப்புக்கள் ஏற்படுவதாக அப்பிரதேசதை சேர்ந்த நாகதம்பிரன் ஆலய பரிபாலன சபையினரும் விளையாட்டு மைதானத்துக்கு அருகில் வசித்து வரும் பொது மக்களும் சபையின் கவனத்துக்கு கொண்டுவந்தமைக்கு அமைவாக சபையின் தீர்மானப்படி பிரதேச விளையாட்டு அதிகாரியின் அறிக்கையினை பெற்று அதன்படி செயற்படுமாறு கோரியதற்கு அமைவாக விளையாட்டு அதிகாரி குறித்த மைதானத்தில் விளையாடுவது தொடர்பாக சாதக பாதக அறிக்கையினை
சமர்ப்பித்திருந்தார். அதற்கமைய தற்காலிகமாக கடினப்பந்து விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடையினை அகற்ற கோரி
விளையாட்டுக் கழகங்கள் போர்கொடி தூக்கியது. இதன் விளைவாக கழங்களை அழைத்து இவ்விடயம் தொடர்பாக கருத்தறியும் வகையில்
கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் தவிசாளருக்கு ஏற்பட்ட சுகயீனம் காரணமாக கூட்டம் நடைபெறாது என அறிவிக்கப்பட்ட
நிலையில் அங்கு கூடிய கழகங்கள் அரசியல் தலைவர்களுக்கு அறிவித்த நிலையில் களத்துக்கு உடன் வந்த சாணக்கியன் அவர்கள்
சபையில் இருந்த அதிகாரிகளை அழைத்து தீர்வு கான எத்தனித்த போது பொறுப்பு கூறக்கூடிய நிலை காணப்படாது
போன காரணத்தினால் கழக உறுப்பினர்கள்
கிழர்தெழுந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து 21.10.2021ந் திகதி உப தவிசாளர் திருமதி க.றஞ்சினி தலைமையில் கூடிய பிரதேச சபை அமர்வின்
போது இவ்விடயம் தொடர்பாக ஆராயப்பட்டது அதன் போது ஏற்பட்ட வாத பிரதிவாதங்களின் அடிப்படையில் 29.10.2021ந் திகதி விஷேட
கூட்டம் கூட்டி தீர்வு காண்பது என்றும் அன்று பெரியகல்லாற்றுக்கு களவிஜயம் செய்து முறைப்பாட்டாளர்களின் கருத்தை பெறுவது எனவும்
தீர்மானிக்கப்பட்டது. களத்துக்கு சென்ற போது குறித்த மக்கள் தமது கருத்துகளை பதிவு செய்திருந்தனர் குறித்த விளையாட்டை
விளையாடுவதாயின் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திவிட்டு செய்யுமாறும் விளையாடுகின்றவர்கள் மைதானத்தினுள் விளையாடும் போது
அயலவர்களின் நலனையும் கருத்தில் கொண்டு விளையாட வேண்டும் எனவும் வார்த்தை பிரயோகங்கள் முறைமைப்படுத்தப்பட்டு அமைய
வேண்டும் எனவும் கருத்து தெரிவித்னர். இது இவ்வாறிருக்க இன்றைய(29) தினம் விஷேட கூட்டம் நடைபெற்ற போது தவிசாளரினால்
அனைவரிடமிருந்தும் கருத்து கோரப்பட்டதற்கு அமைவாக கலந்து கொண்ட உறுப்பினர்கள் பத்து பேர் தடையை நீக்க வேண்டும் எனவும்
இருவர் தடையினை நீக்குவது தற்போதைய சூழ்நிலையில் பொருத்தமற்றது எனவும் இருவர் நடுநிலையாக செயற்பட்டதன் பிரகாரம்
தவிசாளரினால் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துப்படி தடையை நீக்குவது என்றும் தீர்வு எட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.