அம்பாரை மாவட்டத்தில் ரன்பிம  காணிப் பத்திரங்கள் வழங்கி வைப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு வீட்டுக்கு வீடு  காணி உறுதி வழங்கும் தேசிய கொள்ளைத் திட்டத்தின் ஊடாக காணி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேனவினால் அம்பாரை மாவட்டத்தில் ஒரு தொகுதி காணி உறுதிகள்   வழங்கி வைக்கப்பட்டன.இந்நிகழ்வு திருக்கோவில் பிரதேசத்தில்  காணி சீர் திருத்த ஆணைக்குழுவின் ஒழுங்கமைப்பில் அதன்  அம்பாரை மாவட்ட பணிப்பாளர் சி.பரமேஸ்வரன் தலைமையில் இன்று  வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அரசாங்கத்தின் ரன்பிம சுபீட்சத்தின் நோக்கு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் காணியில்லாத மக்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பான காணி உறுதிப் பத்திரங்கள் காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்குச் சொந்தமான இக் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

இதன்போது அம்பாரை மாவட்டத்தில் உள்ள அட்டாளைச்சேனை, திருக்கோவில், பொத்துவில் மற்றும் லாகுகல ஆகிய பிரதேச செயலக  பிரிவுகளில் வாழும் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களுக்கான காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

திருக்கோவில் விநாயகபுரத்தில் இடம்பெற்ற மாவட்ட மாட்ட நிகழ்வின் போது நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட 50 குடும்பங்களுக்கு இவ்வாறு காணி அமைச்சரினால்   காணி உறுதிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் காணி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன, வனஜீவராசிகள் மற்றும் வனபாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விமல வீர திசாநாயக்க, மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான டபிள்யூ. டி. வீரசிஙங்க, பாராளுமன்ற உறுப்பினர் திலக ராஜபக்ஷ மற்றும் கிழக்கு மாகாண காணி ஆணையாளர், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் அரச அதிகாரிகள் ஆகியோரும் கலந்து கொண்டு இருந்தனர்.