கல்முனை இஸ்லாமாபாத் மையவாடியை மாநகர சபையின் பரிபாலனத்திற்கு கொண்டு வர நடவடிக்கை.

(றாசிக் நபாயிஸ், மருதமுனை நிருபர்) கல்முனை மாநகர சபையின் 43 ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வு கடந்த செவ்வாய்க்கிழமை (26)
மாநகர முதல்வர் தலைமையில் இடம் பெற்றது.

இச்சபை அமர்வின்போது
இலங்கையில் காணப்படும் ‘மயான பூமிகள் அப்பிரதேச உள்ளூராட்சி அதிகார சபையின்’ பரிபாலனத்தின் கீழ் நிர்வகிக்கப்படவேண்டும் என்பது உள்ளூராட்சி அதிகார சபையின் சட்டமாகும்.
ஆனால் கடந்த பல வருடங்களாக ‘கல்முனை இஸ்லாமாபாத் அக்பர் முஸ்லிம் மையவாடி மாத்திரம் ‘கல்முனை பிரதேச செயலகத்தின் நிர்வாக அதிகாரத்திற்குள் நிர்வகிக்கப்பட்டு வந்தமை மையவாடியின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு விடயங்களின் உறுதிப்பாடு வலுவிழந்து காணப்படுகின்றது.

ஆகவே மையவாடியை பிரதேச செயலகத்திடமிருந்து மாநகர சபைக்கு விடுவிப்பதற்கான அனைத்து ஆவணங்களையும் இப்பிரதேச மக்களின் பிரதிநிதி என்ற வகையில் எம்சமூகத்தின் தூரநோக்கு நிலையியலைக் கருத்திற் கொண்டும் எனது முயற்சியினால் பல சவால்களுக்கு மத்தியில் சட்டரீதியான அத்தனை ஆவணங்களையும் பூர்த்தி செய்து உரிய திணைக்களங்களிடம் ஆவணப்படுத்தினேன்.

இதனைத் தொடர்ந்து இம்மையவாடி தொடர்பான மாநகர சபைக்கு பொறுப்பான விடயங்களை மேற்கொண்டு அரச வர்த்தமான பத்திரிகையில் வெளியிடுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு இச்சபையின் கவனத்துக்கு தேசிய காங்கிரஸின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சப்ராஸ் மன்சூர் கொண்டு வந்தார் .