(ஏறாவூர் நிருபர் – நாஸர்) மட்டக்களப்பு – சந்திவெளி பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பொலிஸ் நிலையம் 28.10.2021 திறக்கப்பட்டது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத்திட்டத்திற்கமைவாக சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டும் நோக்குடன் இப்பொலிஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் எல்.கே.டபிளியு. கமல் சில்வா மட்டக்களப்பு பிரதிப்பொலிஸ் மா அதிபர் தினேஷ் கருணாநாயக்க ஏறாவூர்ப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கீர்த்தி ஜயந்த உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.