மட்டக்களப்பில் நோயாளிக்கு சோற்றுக்குள் கிடைத்த பரிசு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அண்மித்த பகுதியில் இயங்கிவரும் பொதுமக்கள் சிற்றுண்டிச்சாலையில்  24.10.2021 நோயாளர் ஒருவருக்கென கொள்வனவு செய்யப்பட்ட பகலுணவுப்பொதியில் பல்லியொன்று இறந்தநிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்முனையைச்சேர்ந்த பெண்ணொருவர் 2 ஆம் வாட்டில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவருகிறார். இந்த நோயாளிக்கு துணையாக உள்ள அவரது சகோதரி இச்சிற்றுண்டிச்சாலைக்குச்சென்று  மீன் சாப்பாடுப் பொதியொன்றை வாங்கியுள்ளார். அப்பொதியினைப்பிரித்து சாப்பிடத் தாரானபோது மீன் கறியில் பல்லியொன்றும் வெந்தநிலையில் காணப்பட்டுள்ளமை அவருக்கு வியப்பையும் அருவருப்பையும் ஏற்படுத்தியதாகக் குறிபிட்டார்.

சமையல் காரரது கவனயீனம் காரணமாக கறிச்சட்டிக்குள் பல்லி விழுந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.  எவ்வாறிருப்பினும் வைத்தியசாலை அதிகாரிகள்  இவ்விடயத்தில் கவனம்செலுத்தி உரிய சிற்றுண்டிச்சாலை உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுக்கவேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.