கல்குடா கல்விவலயத்தில் மகிழ்ச்சி கரமான கற்றல்

க.ருத்திரன்.
 கொரோனா வைரஸ் பரவலினால் இழந்த கல்வியை ஈடு செய்யும் தரம் 5 புலமைப் பரிசில் செயற்றிட்டம் ‘மகிழ்ச்சி கரமான கற்றல் ‘ எனும் தொணிப் பொருளிலான செயலமர்வு கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட மீராவோடை சக்தி வித்தியாலயத்தில்  இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பாடசாலை அதிபர் என்.சுதாகரன் தலைமையில் நிகழ்வுகள் யாவும் இடம்பெற்றன. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறவுள்ள இவ் செயலமர்வில் மாணவர்களுக்கான பல்வேறு கல்வி சார்ந்த செயற்பாடுகளான உள ஆற்றுகை,விளையாட்டு மூலமான கற்ப்பித்தல்,புலமை பரீட்சைக்கான பயிற்சிகள்.அடைய வேண்டிய திறன்கள் என்பன போன்ற கல்வி செயற்பாடுகள் இடம்பெறவுள்ளன.
மட்டக்களப்பு  ‘  NOW WOW CHRITY’ என அழைக்கப்படும் புதிய சந்தர்ப்பங்கள் அமைப்பினால்  இவ் கற்றல் கற்ப்பித்தல் செயற்பாடுகள் கிண்ணையடி சரஸ்வதி வித்தியாலயம்,கறுவாக்கேணி விக்னேஸ்வரா வித்தியாலயம் மற்றும் மீராவோடை சக்தி வித்தியாலயம் போன்ற பாடசாலைகளில்  5ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் தினகரன் ரவி,உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.யோகராசா அகியோர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.