ஏறாவூர் சம்பவம் சம்பந்தப்பட்ட பொலிசாருக்கு ஓரிலட்சம் ரூபா சரீரப்பிணை

(ஏறாவூர் நிருபர் நாஸர்)
ஏறாவூரில்  இளைஞர்கள் இருவரைத்தாக்கிய                ஏறாவூர் போக்குவரத்துப் பிரிவு பொலிஸ்  கான்ஸ்டபிள் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில் கைதுசெய்யப்பட்டு                ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் இன்று 23.10.2021  ஆஜர்செய்யப்பட்டதையடுத்து யில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இவர்மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் நவம்பர் மாதம்               10 ஆந்திகதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பொலிஸாரின் நிறுத்தல் சமிஞ்சையை மீறிச்சென்றமை சாரதி அனுமதிப்பத்திரம் இன்மை ஆகிய குற்றச்சாட்டுக்களின்பேரில் தாக்கப்பட்ட இளைஞர்கள்மீது  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை மாலை ஏறாவூர்ப் பிரதான வீதியில் இடம்பெற்ற                         வாகன விபத்தொன்றினையடுத்து பொலிஸார் அவ்விடத்தினை     அளவை செய்துகொண்டிருந்தவேளை மோட்டார் சைக்கிளில் அவ்வழியே மிகவேகமாகப் பயணம்செய்த இவ்வாலிபர்கள்           அளவை நாடாவை  பிய்த்துக்கொண்டு சென்றுள்ளனர்.            இதையடுத்து பொலிஸ் கான்ஸ்டபிள் அவர்களைத் துரத்திச்சென்று பிடித்து தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுதொடர்பான காணொளி சமூக வலயத்தளங்களில்                வைரலாகப் பரவியமை குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளுக்கெதிராக  உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் சரத் வீரசேகர             பொலிஸ் மா அதிபருக்கு அவசர பணிப்புரை விடுத்திருந்தார்.