பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று (22) மட்டக்களப்பு பேத்தாழை விபுலானந்தா கல்லூரியிலும் இடம்பெற்றது.

(க.ருத்திரன்) நாட்டில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதால் மாணவர்களுக்கான பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று (22) மட்டக்களப்பு பேத்தாழை விபுலானந்தா கல்லூரியிலும் இடம்பெற்றது.

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவிற்குட்பட்ட பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் நலன் கருதி வைத்திய அதிகாரி ஸ்ரிவ் சஞ்ஜீவின் வழிகாட்டலில் இவ் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
2020 இல் கா.பொ.த.உயர்தர பரீட்சைக்கு தோற்றிய 2021 இல் கா.பொ.த. உயர் தரத்திற்கு தோற்றவுள்ள மாணவர்கள் அத்துடன் 2001 .10.16 ஆம் திகதி தொடக்கம் 2003.10.15 ஆம் திகதி வரையான வயதுடையவர்களுக்கான இவ் பைசர் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.

வுhழைச்சேனை இந்து கல்லூரி, பேத்தாழை விபுலானந்த கல்லூரி, கல்குடா நாமகல் வித்தியாலயம், கிண்ணையடி சரஸ்வதி வித்தியாலயம், கறுவாக்கேனி விக்னேஸ்வரா வித்தியாலயம் ஆகிய பாடசாலைககளில் கல்வி பயிலும் மாணவர்கள் சுமார் 500 பேருக்கு இவ் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ் சுகாதார நடவடிக்கை நாளை 23 ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளதால் தவற விடுவோர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு சென்று தடுப்பூசி ஏற்றிக் கொள்ளுமாறு கேட்க்கப்படுகின்றனர்.