சத்திய சாய் பாபா சேவா நிலையத்தினூடாக உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

(தலவாக்கலை பி.கேதீஸ்) தலவாக்கலை லிந்துலை நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் வாழ்வாதாரத்தை இழந்து வறுமைக் கோட்டின் கீழ் வாழும் 147 குடும்பங்களுக்கு தலவாக்கலை சத்திய சாய் பாபா சேவா நிலையத்தினூடாக உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வு தலவாக்கலை நகர சபை வளாகத்தில் இடம்பெற்றது. இந்த உலர் உணவு பொருட்களை தலவாக்கலை லிந்துலை நகர சபையின் தலைவர் லெ.பாரதிதாசன் வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் தலவாக்கலை சத்திய சாய் பாபா சேவா நிலையத்தின் தலைவர் இராமையா, செயலாளர் மணிமுத்து மகேஸ்வரன், உபதலைவர் சங்கபிள்ளை இளங்கோவன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.