கிழக்கில் உயர்தர மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி.

திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்
கிழக்கு மாகாணத்தில் கொரோனா நோயாளிகளின் தாக்கம் மற்றும் மரணங்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துள்ளதாக கிழக்குமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர்.எம் தௌபீக் தெரிவித்துள்ளார்

கிழக்கு மாகாணத்தில் செப்டம்பர் மாதம் முதலாம் வாரத்தில் 4400 கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ள  நிலையில் நூறு மரணங்கள் வரை பதிவாகியது இருந்தபோதிலும் அதிகளவாக ஒக்டோபர் முதலாம் திகதி 612 கொரோனா நோயாளிகளும் இருபத்தி இரண்டு மரணங்களும் மாத்திரம் பதிவானதுடன் 2ஆம் திகதி 400 நோயாளிகளிடம் காணப்பட்டுள்ளதாகவும் பதினோரு மரணங்கள் மாத்திரமே பதிவானதாக கிழக்குமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்  ஏ.ஆர்.எம் தௌபீக் தெரிவித்தார்.

மேலும் கிழக்கு மாகாணம் உட்பட நாட்டின் ஏனைய பகுதிகளிலும் கொரோனா தடுப்பு மருந்து வழங்கும் செயற்பாடு விரைவாக செயல்படுத்த பட்டுள்ளதுடன் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் 90 வீதமானவர்களுக்கு கோவிட் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு உள்ளதாகவும்

இம்மாதம் 26ஆம் திகதிக்கு பின்னர் 18 மற்றும் 19 வயதுடைய கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவர்களுக்கு பைசர் தடுப்பு மருந்து வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கல்விப் பொதுத் தராதர உயர்தர பாடசாலைகளில் இவ்வாறு தடுப்பு மருந்தினை பெற்றுக்கொள்ள முடியும் என  ஏ.ஆர்.எம் தௌபீக் தெரிவித்தார்