உரம் இன்றி உழவு இல்லை – மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுப்பு.

ரக்ஸனா)

விவசாயத்திற்கு உரத்தை வழங்கக்கோரி மட்டக்களப்பில் திங்கட்கிழமை(18) ஆரம்பாட்டங்கள் இடம்பெற்றன. விவசாயிகளின் ஒத்துழைப்புடன் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இந்த ஆர்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

வெல்லாவெளி கமநல பிரிவுக்கு முன்னால் காலை 8 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள்இ விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

HomePage

அரசே உடன் உரம் வழங்க வேண்டும், விவசாயிகளுக்கு ஒளி வேண்டும், மண்வளத்தை மாற்றானுக்கு விற்பனை செய்வதை நிறுத்து, உரம் இன்றி உழவு இல்லை, உள்ளிட்ட வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இதே ஆர்ப்பாட்டங்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கொக்கட்டிச்சேலை, ஆயித்தியமலை, வந்தறுமூலை, கிரான் ஆகிய இடங்களிலும் அமைந்துள்ள கமநல கேந்திர நிலையங்களிற்கு முன்னாலும் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.