தலவாக்கலையில் தமிழ் முற்போக்கு கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் 1

தலவாக்கலை பி.கேதீஸ்

நாட்டில் விலைவாசி உயர்வு,உரம் இன்மை,தொழிலாளர்களின் வேதனம் மற்றும் அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து தமிழ் முற்போக்கு கூட்டணியினர் 16.10.2021 தலவாக்கலை நகரில் கண்டன ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன்,பிரதித் தலைவர்களான இராதாகிருஸ்ணன், திகாம்பரம் மற்றும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார்,நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் முக்கியஸ்தர்கள் கலந்துக்கொண்டனர்.