நானுஓயா பொலிஸ் பிரிவில் விபத்து

க.கிஷாந்தன்)

நானுஓயா பொலிஸ் பிரிவில் 15.10.2021 அன்று பிற்பகல் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

அட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் பாமஸ்டன் பகுதியில் காரும் முச்சக்கர வண்டியும் மோதிக்கொண்டதில் முச்சக்கர வண்டி சாரதி காயமடைந்து நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நுவரெலியாவில் இருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த காரின் மீது லிந்துலை பகுதியில் இருந்து நானுஓயா பகுதிக்கு பயணித்த முச்சக்கர வண்டி மோதியதாலேயே இந்த விபத்து இடம் பெற்றதாக விபத்தை நேரில் கண்டவர்கள் கூறினர்.

லிந்துலை பகுதியில் இருந்து நானுஓயா நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி முன்னால் பயணித்துக் கொண்டிருந்த வாகனத்தை முந்தி செல்ல முற்பட்ட சந்தர்ப்பத்தில் எதிர் திசையில் வந்த காருடன் மோதி இந்த விபத்து ஏற்பட்டது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பாக நானுஓயா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.